EIN Presswire

ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி. தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

“தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும்”

NEW YORK, UNITED STATES, April 29, 2022 /EINPresswire.com/ — இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழக சட்டமன்றில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை வரவேற்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியனவற்றை தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக இலங்கைத்தீவுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் தனித்தீர்மானமாக இது முன்மொழியப்பட்டிருந்தது.

இச்சிறப்பு தீர்மானம் தொடர்பில் பேசிய முதல்வர் அவர்கள், ‘இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்’ என பேசியிருந்தார்.

பிரதான எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தமது கருத்துக்களை வழங்கியிருந்ததோடு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேறியது சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்தினை நன்றியோடு வரவேற்பாதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைதாங்கி இந்த முயற்சியினை முன்னெடுப்பதனை நன்றியோடு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும் என்பதோடு, நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முன்னராக அனுப்பியிருந்த கடிதமொன்றில் தெரிவித்தார்.

** நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி **
Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org
இணையத்தள முகவரி: www.tgte-us.org
கீச்சக முகவரி: @TGTE_PMO

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Twitter

vancaylahoa

Trần Xuân Quốc là một người có đam mê về thời trang, công nghệ, làm đẹp. Quốc chuyên tìm hiểu, nghiên cứu thông tin về các sản phẩm, phương pháp làm đẹp, giải pháp công nghệ để gửi đến tất cả mọi người. Các thông tin bổ ích nhất. Mong mọi người đón đọc và luôn ủng hộ quốc nhé

Related Articles

Back to top button
Close
Close